யுகங்களும், இதிஹாச காலங்களும்.

1
97

சிபியும், ராமனும், ராவணனும், சோழனும், பாண்டியனும் வாழ்ந்த அடையாளங்கள் நமது நூல்களிலும், அரசர்கள் எழுதி  வைத்த செப்ப்பெடுகளிலும் இருக்கிறது  என்று பார்த்தோம். இவர்களுள் ராமனை ஒதுக்கினால், சோழர்களையும் தமிழர்களிலிருந்து ஒதுக்குவதற்குச் சமமாகும். ராமனை எங்கோ வடக்கில் இருந்த ஆரியன் என்று சொன்னால், அதே அடையாளம் சோழனுக்கும் பொருந்தும் – என்றெல்லாம் பார்த்தோம்.

ஒரு நூறு வருடங்களுக்கு முன்வரை  இவர்களுக்குள் வேறுபாட்டினை, நம் மக்கள் எண்ணியும் பார்த்ததில்லை.  ஆனால் என்றைக்குத் தமது  பூர்வீக  படிப்பான, குரு குலப் படிப்பையும், குடும்பம் அல்லது குலம் சார்ந்த தொழில் படிப்பையும்  ஒதுக்கி விட்டு, ஆங்கிலேயன் கொடுத்த படிப்பில் முழுவதும் ஒன்றினார்களோ, அன்றிலிருந்து பாரதம்  முழுவதும் நிலவிய பாரம்பரிய சரித்திரத்தையும், மற்றும் பல துறை அறிவையும் மறந்து விட்டனர். அப்படி மறந்ததில் ஒன்றுதான் காலம் பற்றிய அறிவு.

அணுவுக்குள்  அணுவாய், அப்பாலுக்கப்பாலாய் சுருங்கியும், விரிந்தும் இருந்த கோட்பாடுகளையும் அவற்றை ஊடுருவிய காலத்தையும் நம் பாரத நாட்டு மக்கள்தான் அறிந்திருந்தனர். பிரபஞ்சம் முழுவதும் விரிந்த காலத்தை பல் வேறு நிலைகளில் யுகம் என்று பகுத்திருந்தனர். அவர்கள் பலவிதமாகப் பகுத்த விவரங்கள்,  ஆங்கிலக் கல்வி முறையாலும், திராவிடவாதிகள் பிரசாரத்தினாலும் நாளடைவில் மறைந்து போனது. மறக்கடிக்கப்பட்டும் விட்டது.

இன்று அவற்றைத் தேடும் போது, அந்த விவரங்கள் துண்டு துண்டாக நமக்குக் கிடைக்கின்றன. அவற்றை ஆராயும் போது, எவ்வளவு அறிவு சார்ந்ததாக அவை இருக்கின்றன என்றும் தெரிகிறது.  அவற்றைப் பற்றித் தெரிந்து கொண்டால், நம்முடைய பண்டைய சரித்திரத்தின் கால வீச்சினை ஓரளவேனும்  தெரிந்து கொள்ள முடியும்.

முதலில் ராமன் பல லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தான் என்பதை  எடுத்துக் கொள்வோம். லட்சக்கணக்கான வருடங்கள் அளவில் சதுர் மஹா யுகம் என்ற பகுப்பு வழங்கி வருகிறது. இது பிரபஞ்சத்தில் நாம் இருக்கும் பால் வெளி கலக்சியின் மையத்தை, நமது சூரிய மண்டலம் சுற்றி வருவதன் அடிப்படையில் பகுக்கக்ப் பட்டது.
இந்தப் படத்தில் நமது கலக்சியில் சூரியன் இருக்குமிடம் காட்டப்பட்டுள்ளது. மையப் பகுதியை சூரியனும், அதனுடன் சேர்ந்து நாமும் சுற்றி வருகிறோம்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here