Powerful Sivan songs in Tamil | Sivan Bhakti Padagal 3 | Sivan padal | Best Tamil Devotional Songs

0
40

இலங்கையின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை திருத்தான்தோன்றீஸ்வரர் ஆலயம் மீது பிரபல இந்திய பாடகர்களான எஸ்.பி.பாலசுப்பிரமணியம், உன்னிகிருஸ்ணன், மகாநதி சோபனா, மகதி உள்ளிட்ட தென்னிந்திய கலைஞர்களால் பாடப்பட்டு ரி.எல்.மகராஜனால் இசையூட்டப்பட்ட கானாமிர்தம் இறுவட்டு வெளியீட்டு விழா இன்று 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. முதலைக்குடாவைச் சேர்ந்த அமரர் ஆறுமுகம் சிவஞானம் குடும்பத்தாரின் சொந்தச்செலவில் தயாரிக்கப்பட்ட இவ் இறுவட்டு வெளியீட்டுவிழா ஆலய பரிபாலனசபைத்தலைவர் பூ.சுரேந்திரராஜா தலைமையில் நடைபெற்றது. பிரதமஅதிதியாக ஆலயத்தின் முன்னாள் வண்ணக்கரும் த.தே.கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் கலந்து சிறப்பிக்க, சிறப்பு அதிதிகளாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி தங்கேஸ்வரி கதிர்காமர், மண்முனைதென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி வில்வரெத்தினம் பிரதேசசபைச்செயலாளர் ந.கிருஸ்ணபிள்ளை ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள். ஆலய பிரதமகுரு மு.கு.சச்சிதானந்தகுருக்கள் ஆசியுரையை வழங்க அமரர் ஆறுமுகம் சிவஞானம் குடும்பத்தினரின் சார்பாக சிவஞானம் உமாகரன் வெளியீட்டுரையை நிகழ்த்தினார். கானாமிர்தம் இறுவட்டில் இடம்பெற்றுள்ள பாடல்களை இயற்றிய உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன், தேசபந்து அ.சிவநேசராசா, கவிக்கோ வெல்லவூர்கோபால் சிவஸ்ரீ லோகநாதக்குருக்கள், சேனையூரான் ஆறு.தனுஸ்கரன் ஆகியோர் பொன்னாடைபோர்த்தி வெளியீட்டு விழாவில் கௌரவிக்கப்பட்டனர். உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் இந்தியாவில் இருப்பதனால் அவரது உறவினர் த.கோபாலகிருஸ்ணன் கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டார். அதிபர் சிவஞானம் அகிலேஸ்வரன் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here